பாசிர் கூடாங்; சிங்கப்பூரரை பிணையில் விடுவிக்க உத்தரவு

பாசிர் கூடாங்; சிங்கப்பூரரை பிணையில் விடுவிக்க உத்தரவு

2 mins read
5f092a1d-b575-4817-bb70-82dc717aa303
ஜோகூரில் சுங்கை கிம் கிம் ஆற்றில் ரசாயனக் கழிவு வீசப்பட்ட வழக்கு விசாரணையில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள். படம்: பெர்னாமா -

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் நச்சு வாயு கசிவு வழக்கு விசார ணையில் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி ஜோகூர் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி அஹ மட் கமால் முஹமட் சாஹித், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரி சீலனை செய்ய உயர் நீதிமன்றத் துக்கு உரிமையுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார். "சுங்கை கிம் கிம் சம்பவத்தை ஊடகங்கள் பெரிய அளவில் வெளியிட்டு வருவதால் ஜோகூரை மட்டுமல்ல ஒட்டு மொத்த மலேசியாவின் கவனத்தையும் அது ஈர்த்துள் ளது," என்றார் அவர். சென்ற திங்கட்கிழமை அன்று டயர் மறுபயனீட்டு தொழிற்சாலை இயக்குநர் சிங்கப்பூரரான வாங் ஜிங் சாவோ, அவரது மலேசிய வர்த்தகப் பங்காளி யாப் யோக் லியாங், அவர்களுடைய லாரி ஓட்டுநர் என். மரியதாஸ் உட்பட மூவர் மீதும் மாசு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் வாங்கும் யாப்பும் 32 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கு கின்றனர். சுங்கை கிம் கிம் ஆற்றில் சட்டவிரோதமாக ரசாயனக்கழிவுகளைக் கொட்டிய குற்றச்சாட்டை மரியதாஸ் எதிர் நோக்குகிறார். கீழ் நீதிமன்ற நீதிபதி ஜெய் லானி ரஹ்மான், மரியதாசை 100,000 ரிங்கிட் பிணையிலும் யாப்பை 250,000 ரிங்கிட் பிணை யிலும் தலா ஒருவர் உத்தரவாதத் துடன் விடுவிக்க உத்தரவிட்டார். வெளிநாட்டவரான வாங்குக்கு பிணை மறுக்கப்பட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பை தற்போது மாற்றி உள்ள ஜோகூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஹமட், மரியதாசுக்கு 100,000 ரிங்கிட்டிலிருந்து 30,000 ரிங்கிட்டுக்கும் யாப்புக்கு 250,000 ரிங்கிட்டிலிருந்து 150,000 ரிங்கிட்டுக்கும் பிணைத் தொகையைக் குறைத்துள்ளார். மேலும் சிங்கப்பூரரான வாங்கை யும் இரு மலேசியர்களின் உத்தரவாதத்துடன் 250,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க அவர் அனுமதி வழங்கினார்.