பெட்டாலிங் ஜெயா: பெர்மத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸாவின் எண்ணங் களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நூருல் இஸ்ஸாவின் தந்தை அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரின் 'த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் பக்கத்தான் ஹரப்பான் நிர்வாகம் குறித்து நூருல் இஸ்ஸா தமது அதிருப்தியை வெளிப் படுத்தியிருந்தார். "பக்கத்தான் ஹரப்பான் அர சாங்கத்தில் மாற்றங்கள் மெது வாகவே நடக்கின்றன. முன்னைய பல பிரச்சினைகளுக்குக் காரண மான அந்த சர்வாதிகாரியுடன் சேர்ந்து செயல்படுவது சிரமம். மக்கள் பிரதிநிதியாக இருப்பது இதுவே இறுதி என்று நூருல் இஸ்ஸா நேர்காணலில் கூறி யிருந்தார். இது, மலேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த நிலையில் பிரதமர் மகாதீரின் அரசியல் செயலாளரான அபு பாக்கார் யாக்யா, "சிங்கப்பூர் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மகாதீருக்கு எதிராக அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது" என்றார். "இன்னமும் அவர் அரசியல் பக்குவமடையவில்லை. மகாதீர் அரசாங்கத்தை புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு பேசியிருக்கிறார்," என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே நேற்று பேசிய அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் ஃபார்ஹாஷ் வாஃபா சல்வாடோர், அரசாங்கம் மீதான நூருல் இஸ்ஸாவின் அதிருப்தி யையும் பொது தணிக்கைக் குழு விலிருந்து அவர் விலகியதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவரது எண்ணங்களை கேலி செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அன்வார் செயலர்: நூருல் இஸ்ஸாவின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்
1 mins read
பெர்மத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா -

