கடப்பா: பதவி என்றால் பணத்தை அள்ளி வீசுவதற்கு ஏராளமானோர் தயார் நிலையில் உள்ளனர். ஒரு எம்எல்ஏ பதவியைப் பெறுவதற்கு சிலர் கோடிக்கணக்கில் பணத்தை தருவதற்கு தயாராக இருப்பதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் முதல்வர் பதவியைப் பெற ஜெகன் மோகன் ரெட்டியும் ரூ.1,500 கோடி தருவதாக பேரம் பேசியதாக பரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். கடந்த காலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி என்னைச் சந்தித்த போது தன்னை ஆந்திரப்பிரதே சத்தின் முதல்வர் ஆக்கினால் காங்கிரஸ் உயர் மட்ட தலைவர் களுக்கு ரூ.1,500 கோடியைத் தருவதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார். இவர்போன்ற ஒருவரை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஆந்திர மாநிலம் மோசமான நிலையை அடைவது நிச்சயம் என்று பரூக் அப்துல்லா கூறியுள்ளார். காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா நேற்று ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிர சாரத்தில் ஈடுபட்டார். கடப்பாவில் நடைபெற்ற கூட் டத்தில் அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து பிரசாரம் செய்தார். கூட்டத்தில் பரூக் அப்துல்லா பேசுகையில், "சில ஆண்டுகள் முன்பு ஜெகன் மோகன் ரெட்டி என்னை சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் தன்னை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத் துக்கு முதல்வர் ஆக்கினால் காங்கிரஸ் மேலிடத்துக்கு ரூ.1,500 கோடி தருவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார். அவருக்கு அவ்வளவு பெரிய தொகை எங் கிருந்து கிடைத்தது என நான் ஆச்சரியம் அடைந்தேன். "இவருக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன். இந்தப் பணம் அனைத்தும் மக்களைச் சேரவேண் டிய பணம். "இதுபோன்ற நபரை நீங்கள் வெற்றிபெறச் செய்தால் மாநிலம் மிகவும் மோசமான நிலையை சந்திக்கும். "நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம் இன மக்களுக்குப் பாதுகாப்பில்லை. ஜெகன்மோகன் ரெட்டிக்கு நீங்கள் வாக்கு அளித் தால் அது நரேந்திர மோடிக்கு வாக்களித்தது போலத்தான்," என்று பரூக் அப்துல்லா பேசினார்.
'முதல்வர் பதவிக்காக ரூ.1,500 கோடி பேரம் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி'
2 mins read

