பேங்காக்: தாய்லாந்து பொதுத் தேர்தலில் ராணுவ ஆதரவு பாலாங் பிரச்சராத் கட்சி, 8.4 மில்லியன் பெரும்பான்மை வாக்கு களைப் பெற்று வெற்றி பெற்று உள்ளதாக நேற்று தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ மற்ற முடிவுகளை வெளியிட்டது. எதிர்க்கட்சிகளிலேயே முன் னணியில் இருக்கும் பியூ தாய் கட்சிக்கு 7.9 மில்லியன் வாக்கு கள் கிடைத்திருந்ததாகவும் தெரி விக்கப்பட்டது. அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில் மே மாதம் 9ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். இதற்கிடையே 500 நாடாளு மன்ற இடங்களில் ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் உறுப்பினர் கள் எண்ணிக்கையை ஆணையம் இன்னும் உறுதிப்படுத்தி அறி விக்கவில்லை. கீழ் சபையின் 350 இடங் களில் பியூ தாய் கட்சிக்கு 137 என்றும் பாலாங் பிரச்சராத் கட் சிக்கு 97 என்றும் முடிவுகள் கூறின.
தாய்லாந்து பொதுத் தேர்தலில் 8.4 மி. வாக்குகளில் ராணுவ ஆதரவு கட்சிக்கு வெற்றி
1 mins read

