நஜிப் மீதான வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடங்குகிறது

நஜிப் மீதான வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடங்குகிறது

1 mins read

நஜிப் மீதான ஊழல் வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடங்குகிறது கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர் பில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதியன்று தொடங்கவிருந்த விசாரணை, கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விசாரிக்கப்படு வதற்கு முன்னதாகவே நடை முறை விவகாரங்கள் தொடர்பில் மேல்முறையீடுகள் செய்யப்பட்ட தால் இந்த ஒத்திவைப்பு நேர்ந் தது. வழக்குக்காக அரசு தரப் பினர் தயாராக இருப்பதாகவும் புதன்கிழமை சாட்சிகள் விசாரணை இடம்பெறும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வி.சிதம்பரம் கூறினார். கிட்டத் தட்ட 42 மி. ரிங்கிட் பண மோசடி, நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியது தொடர்பில் ஏழு குற்றச்சாட்டுகளை நஜிப் மறுத்துள்ளார்.