மெக்சிகோ: மேற்கு குவாத்தாமாலாவில் சாலையில் கூட்டமாக நின்றுகொண்டிருந்த மக்கள் மீது சரக்கு வண்டி ஒன்று மோதியதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். கார் மோதி ஒருவர் சாலையில் கிடந்ததைப் பார்ப்பதற்காகவும் உதவி அளிப்பதற்காகவும் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை அந்தச் சரக்கு வண்டி இடித்ததாக தீயணைப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார். இதுவரை 32 பேர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் அபாயகரமான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் பொது சுகாதார அமைச்சர் கூறினார். இதன் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு இயன்றவரை ஆதரவு நல்கி வருவதாக அதிபர் ஜிம்மி மொரேல்ஸ் தமது டுவிட்டர் வழி பகிர்ந்து கொண்டதுடன் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார். அண்மைய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான போக்குவரத்து விபத்துகளில் இச்சம்பவமும் ஒன்று. 2013ஆம் ஆண்டில் மலை உச்சியிலிருந்து பேருந்து விழுந்ததில் 43 பேர் உயிரிழந்ததுடன் பலர் பலத்த காயமடைந்தனர்.
மெக்சிகோ: கூட்டத்திற்குள் வாகனம் புகுந்து 32 பேர் பலி
1 mins read

