பிரெக்சிட்டின் 8 மாற்று திட்டங்களும் நிராகரிப்பு

லண்டன்: பிரெக்சிட் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் விவாதித்த 8 மாற்று திட்டங்களையும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிராகரித்துவிட் டது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர் பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று எட்டு மாற்று ஒப்பந்தங்களை முன்வைத்தனர்.
ஆனால் இந்த ஒப்பந்தங் களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வில்லை.
அதனால் எட்டு மாற்று திட்டங்களும் நிராகரிக்கப்பட்டன.
பிரெக்சிட் விவகாரம் தொடர் பில் மூன்றாவது முறையாக வாக் கெடுப்பு நடத்தி நாடாளுமன்றம் தம் பக்கம் சாய்ந்தால், பிரதமர் பதவியைத் துறக்கவும் தயார் என்று நேற்று முன்தினம் திருமதி மே கூறினார். இருப்பினும் அவரின் முயற்சி கைகூடவில்லை.
ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே ஏற் படுத்திய ஒப்பந்தத்தை இரு முறை அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும் பான்மை வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.
அத்துடன் ஒப்பந்தம் இல்லா பிரெக்சிட் தீர்மானமும் இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட்டை தாமதிப்பதற்கான தீர்மானம் மட்டுமே ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறை வேற்றப்பட்டது.
இதனால் பிரெக்சிட்டின் காலக் கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத் திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் மன்றத் தலைவர் டோனல்ட் டஸ்க் ஏற்றுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!