பிரெக்சிட்டின் 8 மாற்று திட்டங்களும் நிராகரிப்பு

பிரெக்சிட்டின் 8 மாற்று திட்டங்களும் நிராகரிப்பு

1 mins read
46b98d3f-4b90-4228-8ed3-a7c5b216faf6
-

லண்டன்: பிரெக்சிட் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் விவாதித்த 8 மாற்று திட்டங்களையும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிராகரித்துவிட் டது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர் பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று எட்டு மாற்று ஒப்பந்தங்களை முன்வைத்தனர். ஆனால் இந்த ஒப்பந்தங் களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வில்லை. அதனால் எட்டு மாற்று திட்டங்களும் நிராகரிக்கப்பட்டன. பிரெக்சிட் விவகாரம் தொடர் பில் மூன்றாவது முறையாக வாக் கெடுப்பு நடத்தி நாடாளுமன்றம் தம் பக்கம் சாய்ந்தால், பிரதமர் பதவியைத் துறக்கவும் தயார் என்று நேற்று முன்தினம் திருமதி மே கூறினார். இருப்பினும் அவரின் முயற்சி கைகூடவில்லை. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே ஏற் படுத்திய ஒப்பந்தத்தை இரு முறை அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும் பான்மை வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது. அத்துடன் ஒப்பந்தம் இல்லா பிரெக்சிட் தீர்மானமும் இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட்டை தாமதிப்பதற்கான தீர்மானம் மட்டுமே ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறை வேற்றப்பட்டது. இதனால் பிரெக்சிட்டின் காலக் கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத் திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் மன்றத் தலைவர் டோனல்ட் டஸ்க் ஏற்றுக்கொண்டார்.