கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூர், 67, தன்மீதுள்ள ஊழல் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்குமாறு மனு செய்துள்ள நிலையில், அதன் மீதான விசாரணை அடுத்த மாதம் 19ஆம் தேதியன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ்மாவின் ஊழல் வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றிவிட்டு விசாரிக்குமாறு அரசு தரப்பு கேட்டுக்கொண்ட தற்கு இணங்க உயர்நீதிமன்றம் விசாரணைக்குக் கடந்த 20ஆம் தேதியன்று உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்யுமாறு ரோஸ்மா மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்தார். இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் அலுவலகத்தில் ரோஸ்மாவின் விண்ணப்பம் விசாரணைக்கு வரும். சரவாக்கின் 369 கிராமப் புற பள்ளிகளுக்குச் சூரிய சக்தி வழங்கும் திட்டத்திற்காக 187.5 மி. ரிங்கிட்டை இவர் கேட்டிருந்த தாகவும் 1.5 மி. ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டதாகவும் இவர் மீது கூறப்பட்ட இரு குற்றச்சாட்டு களைக் கடந்தாண்டு நவம்பர் 15 அன்று மறுத்திருந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண் டனையும் ஊழல் தொகையின் ஐந்து மடங்கு அபராதமும் விதிக்கப்படலாம்.
ரோஸ்மா ஊழல் வழக்கு; நிறுத்தி வைக்க கோரிக்கை
1 mins read

