சுடச் சுடச் செய்திகள்

குறைந்த விலையில் பொருட்களை விற்கும் பேரங்காடி - ஜோகூர் சுல்தான் திட்டம்

சந்தை விலையைவிடக் குறைவான விலையில் பொருட்களை விற்க பேரங்காடி ஒன்றுடன் பங்காளித்துவம் ஒன்றில் இணையப்போவதாக ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் தெரிவித்துள்ளார்.

பேரங்காடியுடனான இந்த உத்திபூர்வ ஒத்துழைப்பை மேற்கொள்ளத் திட்டமிடுவதாக மத்திய கிழக்கில் இருக்கும் அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களைவிட இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை 10 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று அந்தப் பேரங்காடி உத்தரவாதம் அளித்திருப்பதாக அவர் கூறினார்.

பொருட்கள் மலிவாக இருந்தாலும் அவற்றின் தரம் உயர்வாக இருக்கும் என்று சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

“குறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்கள் தங்களது அன்றாட அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலையில் பெற இந்த ஏற்பாடு வழிசெய்யும்,” என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட பேரங்காடியின் பெயரை அவர் வெளியிடவில்லை. மேல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon