வாஷிங்டன்: மார்ச் 10ஆம் தேதி நிகழ்ந்த எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக் காவில் உள்ள நீதிமன்றத்தில் போயிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகாகோ நீதி மன்றத்தில் ருவாண்டா குடி மகனான ஜேக்சன் முசோனியின் குடும்பத்தினர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர். போயிங் நிறு வனம் அதன் '737 மேக்ஸ்' ரக விமானத்தின் தானியக்க கட்டுப் பாட்டு முறையில் குறைபாடு உள்ளது என்று வழக்கில் அந்த குடும்பத்தினர் குறிப்பிட்டுள் ளனர். ஆனால் தம் மீது தொடுக் கப்பட்ட வழக்கு குறித்து போயிங் நிறுவனம் கருத்து எதுவும் தெரி விக்கவில்லை. விபத்துக்குள் ளான எத்தியோப்பிய விமான நிறுவனத்தின் விமானம் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரகத்தை சேர்ந்தது. எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பில் போயிங்குக்கு எதிராக தொடுக்கப்பட்ட முதல் வழக்கு இது.
போயிங் நிறுவனம் மீது வழக்கு
1 mins read

