பெய்ஜிங்: உலகின் ஆகப்பெரிய இரு பொருளியல் நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் பூசலைத் தீர்க்கும் பேச்சு வார்த்தையை பெய்ஜிங்கில் தொடங்கியிருக்கும் வேளையில் அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் மினுச்சின் ஆக்ககரமான முடிவு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பெய்ஜிங்கில் நேற்று முன் தினம் இரவு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்து, பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய தாக அவர் சொன்னார். சீனாவின் வர்த்தகப் பிரதிநிதி களை நேருக்கு நேர் சந்தித்து பேச மினுச்சினும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லைட் டிசரும் பெய்ஜிங் வந்துள்ளனர். சீனா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பூசலுக்கு மார்ச் மாத இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது. அமெரிக்க அதி பர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதி பர் ஸி ஜின்பிங்கும் உடன்பாட்டில் கையெழுத்திடுவர் என்றும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் வர்த்தகப் பூசலுக்கு இதுவரை முடிவு ஏற்பட வில்லை. இந்த நிலையில் முந்தைய நாள் விருந்து இரு தரப்பிலும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று கூறிய அமைச்சர் மினுச் சின், அதே நம்பிக்கையுடன் வர்த்தகப்பேச்சை இன்று தொடங் குவதாக நேற்று சொன்னார். சீனா, மற்ற நாடுகளுடன் கொண்டுள்ள வர்த்தகப் பாணியை மாற்றி, அதன் சந்தைகளை அமெரிக்காவுக்கு திறந்துவிடுவதற் காக கடந்த ஆண்டு சீனாவி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வரிகளை விதித்தார். இந்த நிலையில் சீனாவின் சந்தைகளில் வெளிநாட்டு வங்கி களும் காப்புறுதி நிறுவனங்களும் நுழைய அனுமதியளிக்கப்படும் என்று சீனப் பிரதமர் வியாழக் கிழமை அன்று கூறியிருந்தார். இதையடுத்து சீனாவில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு ஏதுவாக விதி முறைகள் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெய்ஜிங்கில் அமெரிக்க-சீன வர்த்தகப்பேச்சு தொடங்கியது
2 mins read

