பிரெக்சிட்டுக்கு கடைசி வாய்ப்பு

பிரெக்சிட்டுக்கு கடைசி வாய்ப்பு

1 mins read

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக வழங்கப் பட்டுள்ள அவகாசம் கடைசி வாய்ப்பு என்று பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு நினைவூட்டப்பட்டுள் ளது. மே 22ஆம் தேதி வரையிலான அவகாசம் மக்களுக்கும் வர்த்தகத் துக்கும் நிச்சயமான சூழ் நிலையை ஏற்படுத்தியிருப் பதாகவும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரெக்சிட் திட்டத்தை இவ்வார இறுதிக்குள் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே மே 22ஆம் தேதி வரை அவ காசத்தை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியுள்ளது. இல்லை யெனில் ஏப்ரல் 12ஆம் தேதி இறுதிக்கெடுவை மேலும் நீட்டிப்பது ஐரோப்பிய தலைவர்களின் கையில் உள்ளது.