இறுதிக்கட்டத்தை நெருங்குவதாக  மகாதீர் உருக்கம்

வாழப்போகும் நாட்கள் அதி கம் இல்லாததால் நாட் டுக்குச் செய்ய வேண்டிய வற்றை விரைந்து செய்து முடிக்க விரும்புவதாக மலே சிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
“93 வயதாகும் நான் இத் தனை காலம் வரை வாழ்ந் ததே எனக்குக் கிடைத்த பேறாகும். உண்மையில் சொல்லப்போனால், எனக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர் கள் (முன்னாள் பிரதமர்கள் நஜிப் ரசாக், அப்துல்லா படாவி) செய்தவற்றைக் காண நான் இருந்திருக்கக் கூடாது.
“வயதானபோதிலும் என்னால் செயலாற்ற முடி வது என்பது நான் பெற்ற அதிர்ஷ்டம்,” என ‘ஃபோக் கஸ் மலேசியா’ என்னும் மலேசிய வர்த்தக சஞ்சிகை நேர்காணலின்போது டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
“எனக்கு மிகவும் வய தாகி வருவதை உணர்கி றேன். கூடிய விரைவில் நான் பலவீனமடைவதோடு உயிரிழந்தும் விடுவேன். எனவே, இப்போதெல்லாம் நான் அவசரப்படுகிறேன். சிலரைப்போல என்னால் மெத்தனமாக இருக்க முடி யாது. 
“வாழும் நாட்கள் குறை வாக இருப்பதாக உணர்வ தால் நாட்டுக்குச் செய்ய வேண்டிய நல்ல காரியங் களை வேகமாகச் செய்ய வேண்டிய நிலையில் உள் ளேன்,” என சஞ்சிகையிடம் டாக்டர் மகாதீர் கூறியதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவித்தது.
பிரதமர் பதவி பற்றிக் குறிப்பிடுகையில், “எதிர்த் தரப்பு கூட்டணியின் பிர தமர் பதவிக்கான வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்பட்டி ருப்பதாக மட்டும் சொன் னார்கள். ஆனால் அது எதுவரை என்று காலக்கெடு எதையும் அவர்கள் குறிப்பிட வில்லை.
“நான் ஒரு இடைக்காலப் பிரதமர் என்றும் வேறொரு வர் அந்தப் பொறுப்புக்கு வருவார் என்றும் என்னிடம் சொன்னார்கள்,” என்றார் மலேசிய பிரதமர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon