வடதாய்லாந்தில் அபாயகட்டத்தில் காற்றுமாசு

காற்று மாசு அபாயகட்டத்தைத் தாண்டியுள்ளதால் சியாங் மாய் நகரிலும் வடதாய்லாந்து மாநிலங்கள் முழுவதிலும் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய கல்வியாளர் ஒருவர் தாய்லாந்து அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு உள்ளார்.
நேற்றுக் காலை பிஎம்2.5 காற்று மாசு அளவீடு அபாய அளவில் இருந்ததாக ஏ‌ஷியா நெட்வொர்க் தெரிவித்தது. அந்த அபாய அளவு நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் எளிதாகக் கலந்து உடல்நலிவை ஏற்படுத்தக் கூடியது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. 
அதாவது ஒரு கன மீட்டருக்கு 700 மைக்ரோ கிராம் என்ற அள வையும் தாண்டி அந்த அளவீடு இருந்ததாக செய்திகள் குறிப்பிட் டன.
எனவே சியாங் மாய் பகுதியில் வசிப்பவர்கள் குளிரூட்டிகளுடனான கட்டடத்திற்குள்ளேயே தங்கி இருக் குமாறும் வெளி நடவடிக்கை களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
500 மைக்ரோ கிராமைத் தாண் டினால் அது அபாய அளவு என்று கேசெட்சார்ட் பல்கலைக்கழக விரி வுரையாளர் விட்சானு அவ்வாவனிக் தெரிவித்துள்ளார். 
மேலும், பிம்2.5 என்னும் அளவு தாய்லாந்தில் இதுவரை பதிவாகி உள்ள ஆக அதிக அபாய அளவு என்றார் அவர்.
கடந்த ஜனவரி மாதம் பிஎம்2.5 என்னும் அளவு 70 முதல் 120 வரையிலான மைக்ரோகிராம் இருந்த போதே பேங்காக்கின் அனைத்து பள்ளிக்கூடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon