சீனாவில் கொள்கலன் வெடித்து ஏழு பேர் பலி

சீனாவில் கொள்கலன் வெடித்து ஏழு பேர் பலி

1 mins read
Google News Preferred Icon

நான்ஜிங்: சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கொள்கலன் வெடித்ததில் ஏழு பேர் கொல்லப் பட்டனர். ஐவர் காயம் அடைந்த னர். கொள்கலனில் உலோகக் கழிவுப் பொருட்கள் கொட்டப்பட் டிருந்தன. குன்ஷானில் உள்ள குன் ஷான் சில்லுத் தயாரிப்பு தொழிற் சாலையில் நேற்றுக்காலை உள்ளூர் நேரப்படி 7.12 மணியள வில் கொள்கலன் வெடித்தது என்று அதிகாரிகள் கூறினர். இதற்கான காரணம் தெரிய வில்லை. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கு முன்பு சனிக்கிழமை அன்று கிழக்கு சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் எரி வாயுக் கசிவினால் ஏற்பட்ட வெடிப்பில் ஐந்து ஊழியர்கள் மாண்டனர். மூவர் காயம் அடைந் தனர்.