மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் கேள்வி" '3வது பாலமா, என்ன ஆனது ரயில் திட்டம்'

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் கேள்வி" '3வது பாலமா, என்ன ஆனது ரயில் திட்டம்'

2 mins read

கோலாலம்பூர்: சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே 3வது பாலமா, அப்படியென்றால் அதி வேக ரயில் திட்டம் என்ன ஆனது என்று ஆளும் பக்கத்தான் ஹரப் பான் அரசாங்கத்துக்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி யெழுப்பியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் திட்டத்தின் கட்டு மானப் பணிகளைத் தொடங்கு வதில் தாமதம் ஏன் என்றும் அவர் கேட்டார். பெக்கான் நாடாளுமன்ற உறுப் பினருமான திரு நஜிப், 3வது பாலம் பற்றி பேசுவதற்குப் பதிலாக இரு நாட்டின் எல்லைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் அதிவேக ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணி களை திட்டமிட்டபடி அரசாங்கம் இவ்வாண்டு தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "சிங்கப்பூருடன் ரயில் திட்டத் திற்கு ஏற்கெனவே உடன்பாடு போடப்பட்டுள்ளது. அதில் கையெழுத்தும் இடப்பட்டுள்ளது. ஏன் இன்னமும் காத்திருக்க வேண்டும்," என்று ஃபேஸ்புக் பதிவில் திரு நஜிப் கூறியுள்ளார். சிங்கப்பூருடன் அதிக பாலங் களைக் கட்ட பிரதமர் மகாதீரும் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கும் ஆர்வமுடன் இருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல் களை சுட்டிக்காட்டி நஜிப் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். கடந்த ஆண்டு பிரதமர் நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியிலிருந்தபோது ஜோகூர் பாருவின் புக்கிட் சாகரையும் சிங்கப்பூரின் உட்லண்ட்சையும் இணைக்கும் அதிவேக ரயில் திட்டம் கையெழுத்தானது. இந்த ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணி இவ்வாண்டு தொடங்கப்பட வேண்டும். வரும் 2024ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. புதிய அதிவேக ரயில் சேவை யால் இரு நாடுகளுக்கு இடையே நாள்தோறும் பயணம் செய்யும் 300,000 பேருக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. உச்சக்கட்ட பயண நேரத் தில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு வழிப்பயணத்தில் சுமார் 60,000 பேர் அதிவேக ரயிலில் பயணம் செய்ய முடியும். இதனால் இரு நாட்டின் எல்லைகளுக்கு இடையே போக்கு வரத்து நெரிசல் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.