நேபாளத்தில் புயலால் குறைந்தது 27 பேர் பலி

நேபாளத்தில் புயலால் குறைந்தது 27 பேர் பலி

1 mins read
25adda2a-f4a7-4e5a-98b5-ce520711e6cf
-

நேபாளத்தைக் கடுமையான புயல் தாக்கியதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாகவும் 400 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் தலைநகர் காட்மாண்டுவிலிருந்து கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பாரா மாவட்டம் கனமழையாலும் புயலாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உடைமைகளையும் வீடுகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்க அந்நாட்டின் பேரிடர் நிர்வாகப் பணியாளர்கள் விரைந்து உதவி வழங்குகின்றனர். மீட்புப் பணிகளில் அந்நாட்டு போலிசாரும் ராணுவமும் உதவி வருவதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிடுவதாக நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா ஒளி தெரிவித்தார்.