பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை மறுக்கும் அமெரிக்காவின் முன்னைய துணை அதிபர்

அமெரிக்காவின் முன்னைய துணை அதிபர் ஜோ பைடன் தன்னைத் தகாத முறையில் தீண்டியதாகப் பழிசுமத்தும் முன்னைய பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் திரு பைடன் பதிலளித்திருக்கிறார். 2014ஆம் ஆண்டில் தேர்தல் பிரசார நிகழ்ச்சி ஒன்றின்போது திரு பைடன் அவ்வாறு செய்ததாக லூசி ஃப்லோரெஸ் தெரிவித்தார். திருவாட்டி ஃப்லோரெஸுக்கு இப்போது 39 வயது.

பல்லாண்டுகளாகப் பொதுச்சேவை ஆற்றியபோது பலருடன் கைக்குலுக்கியதாகவும் பலரைக் கட்டி அணைத்து அவர்களுக்கு ஆதரவு, பாசம், ஆறுதல் ஆகியவற்றைப் பொழிந்ததாகவும் திரு பைடன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) தெரிவித்தார்.

“ஒருமுறைகூட நான் தவறாக நடந்துகொண்டேன் என்று நினைக்கவே இல்லை. அவ்வாறு நடந்துகொண்டேன் என்று எவரேனும் கூறினால் அதற்கு மரியாதையுடன் செவிசாய்ப்பேன். ஆனால் நான் வேண்டுமென்றே தவறாக நடந்துகொள்ளவில்லை,” என்று 76 வயது திரு பைடன் கூறினார்.

பெண் உரிமைக்கான ஆகப் பெரும் ஆதரவாளராகத் தொடர்ந்து இருக்கப்போவதாகவும் திரு பைடன் கூறினார். பெண்களுக்கு உரிய சமத்துவம் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதை உறுதி செய்ய இதுவரை தமது பொதுப்பணியில் போராடியதுபோல் இனிமேலும் போராடப்போவதாகவும் அவர் கூறினார்.

ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடையில் திரு பைடனுக்கான ஆதரவு வலுவாக இருப்பதாக அண்மையில் வெளிவந்த ‘என்பிசி-வால்ஸ்ட்ரீட்’ கருத்துக்கணிப்பு குறிப்பிடுகிறது. அந்த வாக்காளர்களில் 75 விழுக்காட்டினர் திரு பைடனை ஆதரிப்பதாகவும் 25 விழுக்காட்டினர் அவரை ஆதரிக்கத் தயங்குவதாகவும் கருத்தாய்வு குறிப்பிடுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon