மலேசியா: மரண தண்டனையிலிருந்து தப்பிய வியட்னாமிய மாது

2 mins read
3dcb494c-eb9c-4c3a-a183-076cc1456ceb
ஹுவோங் -

கோலாலம்பூர்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரின் மரணம் தொடர்பான வழக்கில் கொலை குற்றம் சாட்டப்பட்ட வியட்னாமிய மாதின் குற்றச்சாட்டு குறைக்கப் பட்டது. கொலைக் குற்றச்சாட்டுக்குப் பதிலாகக் காயம் விளைவித்த குற்றச்சாட்டாக குறைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை டொவான் தி ஹுவோங் என்ற அந்த மாது ஏற்றுக்கொண்டதால், அவருக்கு மூன்று ஆண்டு நான்கு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நன்னடத்தை காரணமாக ஹுவோங் முன்கூட்டியே விடு தலை செய்யப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் மீது முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ள நாளிலிருந்து அவர் சிறைக் காவலில் இருந்துள்ளதால் அவருடைய தண்டனைக் காலம் எதிர்வரும் மே மாதம் 4ஆம் தேதி யுடன் முடிவுறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவர் மீதான புதிய குற்றச்சாட்டு மலேசியக் குற்ற வியல் தண்டனைச் சட்டப் பிரிவு 324ன்படி காயம் விளைவித்த ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கொலைக் குற்றச் சாட்டு காரணமாக மரண தண்டனையை எதிர்நோக்கிய ஹோங், அதிலிருந்து தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று மலேசியாவின் ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் முன் னிலையான ஹுவோங், குற்றச் சாட்டு குறைப்பு, தண்டனை ஆகியவற்றை கேட்டபின் நிம்மதி பெருமூச்சு விட்டார். வியட்னாமிய மொழிபெயர்ப்பாளர் மூலம் அவர் நீதிமன்றம், தலைமை சட்ட அதிகாரி, அரசு வழக்கறிஞர்கள், தற்காப்பு வழக்கறிஞர்கள் வியட்னாமிய அரசாங்கம் என அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண் டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹுவோங், தாம் நடிகையாகவும் பாடகியாகவும் தொடர்ந்து பணியாற்றப் போவதாகக் கூறி னார். அவரது சார்பாகப் பேசிய அவரது வழக்கறிஞர், மலேசியா வுக்குத் தாம் வந்ததற்கான காரணங்கள் குறித்து டொவான் உண்மையைச் சொன்னதாகக் கூறினார். அதுமட்டுமல்லாது விசாரணையின்போது அவர் உண்மையையே பேசி வந்துள்ள தாகக் குறிப்பிட்டார். "அவர் குற்றவாளியோ குற்றம் செய்யக்கூடிய தன்மையுடையவரோ அல்ல," என்று அவரது வழக்கறி ஞர் திரு ஹிஷாம் விளக்கினார். எனினும், "அவர் மற்றவர் சொல்வதை எளிதில் நம்பிவிடக் கூடியவர்," என்றும் அவரது இந்தப் பலவீனத்தை மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளனர் என்று கூறினார். அவரது இந்தக் கூற்றுக்கு பதிலளித்த அரசு தரப்பு வழக் கறிஞர், தண்டனை விதிக்கும் போது இந்த வழக்கின் கடுமை யையும் பொதுமக்கள் நலன் குறித்தும் கவனம் கொள்ளுமாறு நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண் டார். அவருக்கு மூன்று ஆண்டு, நான்கு மாதச் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி அவர் அதிர்ஷ் டசாலி என்று கூறினார். "அவர் அதிர்ஷ்டசாலி என்று நான் கூறுவதற்குக் காரணம், கொலை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனைதான் விதிக்கப்படும். "அதற்குப் பதிலாக, அரசு தரப்பு பிரிவு 324ன் கீழ் காயம் விளைவித்த குற்றச்சாட்டாக மாற்றப்பட்டுள்ளது. "இதற்கு அதிகபட்ச தண்டனை 10 ஆண்டு சிறை, அத்துடன் அபராதமோ அல்லது சாட்டை அடியோ அல்லது இந்த மூன்றில் ஏதாவது இரண்டு விதிக்கப்படும். "எனினும், குற்றவியல் நடை முறைச் சட்டம் மாதருக்குச் சாட்டையடியிலிருந்து விலக்கு அளித்திருப்பதால், அவருக்கு அந்த தண்டனையை நான் வழங்க முடியாது," என்று விளக்கினார்.