தங்கத்தின் தேவை நான்காண்டு உச்சத்தை தொடும்

தங்கத்தின் தேவை நான்காண்டு உச்சத்தை தொடும்

1 mins read

உலக அளவிலான தங்கத்தின் தேவை இவ்வாண்டில் கடந்த நான்காண்டுகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இவ்வாண்டு முழுமைக்கும் 4,370 டன் தங்கம் பயனீடு காணும் என்றும் இதற்கு முன்னர் ஆக அதிக அளவைத் தொட்ட 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் இது சற்று அதிக மானது என்றும் 'மெட்டல்ஸ் ஃபோக்கஸ்' என்னும் தங்க உலோக வர்த்தக ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் 4,364 டன் தங்கம் வர்த்தகம் ஆனது. 'தங்கம் மீதான கவனம் 2019' என்னும் தலைப்பில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க விலையின் போக்கையும் கணித்துள்ளது. இவ்வாண்டில் அவுன்ஸ் தங்கம் சராசரியாக 1,310 அமெரிக்க டாலர் என்னும் நிலவரத்தை விலை தொடும் என்றும் கடந்த ஆண்டில் அந்த விலை 1,268 ஆக இருந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இவ்வாண்டின் விலை கடந்த 2013ஆம் ஆண் டிற்குப் பிறகு உச்சத்தைத் தொடும் என்றும் 'மெட்டல்ஸ் ஃபோக்கஸ்' தெரிவித்துள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 1,300 அமெரிக்க டாலர் என்னும் அளவில் உலகச் சந்தை விலை நிலவரம் உள்ளது.