மகாதீரை ஆதரிக்க முன்னாள் அம்னோ அமைச்சர் தயார்

மகாதீரை ஆதரிக்க முன்னாள் அம்னோ அமைச்சர் தயார்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதின் தலைமைத்துவத்துக்கு ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக மலேசியாவின் முன்னாள் அமைச் சரும் அம்னோவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ‌ஷிஷாமுதீன் உசேன் தெரிவித் துள்ளார். அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் அன்வார் இப்ராஹிமின் மகளுமான நூருல் இசா பேட்டி அளித்தபோது டாக்டர் மகாதீரை சர்வதிகாரி என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து பல அதிருப்திக் குரல்கள் எழுந்தன. "என்னால் டாக்டர் மகாதீரின் தலைமையின்கீழ் 20 ஆண்டுகளுக்குப் பணிபுரிய முடிந்தது. அப்போது எனக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை தற்போது மட்டும் ஏன் சர்வாதிகாரி என்ற சொல் வெளியாகிறது? அதிலும் ஆளும் பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்தவர்களிடமிருந்து இந்த வார்த்தை வருகிறது. நாட்டின் நன்மைக்கான ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி யைச் சேர்ந்தோர் அவர்களுக்குள் அடித்துப் பிடித்துக் கொண் டிருப்பதை நிறுத்த வேண்டும் என்று திரு ஹிஷாமுதீன் தெரிவித்தார்.