ஊழல் வழக்கை ஒத்திவைக்கும் நஜிப்பின் முயற்சி தோல்வியில் முடிந்தது

ஊழல் வழக்கை ஒத்திவைக்கும் நஜிப்பின் முயற்சி தோல்வியில் முடிந்தது

1 mins read

பெட்டாலிங் ஜெயா: தமக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எடுத்த கடைசிக்கட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, ஏற்கெனவே முடிவு செய்தபடி அவருக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது. பதவியை தவறான முறையில் பயன்படுத்தியது, நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளை மறுத்த திரு நஜிப், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதியன்று வழக்கு கோரினார். நஜிப்பின் ஊழல் வழக்கை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பலர் கையெழுத்திட்ட பெயர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.