ஒப்பந்தங்கள் மறுஆய்வுக்கு டுட்டர்டே உத்தரவு

ஒப்பந்தங்கள் மறுஆய்வுக்கு டுட்டர்டே உத்தரவு

1 mins read

மணிலா: நிறுவனங்கள், மற்ற நாடுகளுடனான பிலிப்பீன்ஸ் அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் அனைத்தையும் மறுஆய்வு செய் யுமாறு அந்நாட்டு அதிபர் ரோட் ரிகோ டுட்டர்டே உத்தர விட்டுள்ளார். அந்த ஒப்பந்தங்கள் பிலிப் பீன்ஸ் நாட்டவருக்கு நியாய மானதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக பிலிப்பீன்ஸ் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் செல்வ டோர் பனேலோ தெரிவித்தார். "ஒப்பந்தங்கள் பிலிப்பீன்ஸ் நாட்டவருக்குப் பின்னடைவைத் தருகின்றனவா என்பதையும் பிலிப்பீன்ஸின் அரசியல் சாச னத்தை மீறுகின்றனவா என்பதை யும் மறுஆய்வு அலசி ஆராயும்," என்று அவர் கூறினார். எத்தனை ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப் படும் என்ற தகவல் வெளியிடப் படவில்லை.