வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் தம்மைத் தகாத முறை யில் தொட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் முன்னாள் உதவியாளர் புகார் செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நிதி திரட்டு நிகழ்ச்சியில் திரு பைடன் தம்மிடம் முறை தவறி நடந்துகொண்டதாக திருவாட்டி ஏமி லாப்போஸ் கூறினார். திரு பைடன் தமக்கு அருகில் வந்து பின் தலையில் முத்தமிட்ட தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி லூசி ஃபிளோரேஸ் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன் முறை தவறி நடந்துகொண்டதாகப் புகார்
1 mins read

