‘சிங்கப்பூர் கடற்பகுதிக்குள் அத்துமீறாது’

புத்ராஜெயா: ஜோகூரில் உள்ள தஞ்சோங் பலேபாஸ் துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் ஒரு கப்பலிலிருந்து வேறொரு கப்பலுக்கு சரக்குகளை மாற்றும் வசதியைக் கட்டுவதற்கான திட்டத்தை மலேசியா நேற்று தொடங்கி வைத்தது.
இந்த வசதியைக் கட்ட 244 மில்லியன் வெள்ளி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி தயாரானதும் கப்பல்களிலிருந்து மற்ற கப்பல்களுக்கு சரக்குகளை மாற்ற கப்பல்கள் துறைமுகத்துக்கு வரத் தேவையிருக் காது. மாறாக, ஜோகூர் நீரணையில் இருக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தி சரக்குகளை மாற்றிக் கொள்ளலாம்.
இதன் விளைவாக கப்பல் நிறுவனங்களின் செலவினம் குறையும் என்று மலேசிய அதிகாரிகள் தெரி வித்தனர்.
சரக்குகளைக் நடுக்கடலிலேயே மாற்ற புதிதாகக் கட்டப்படும் வசதி செந்தோசா தீவைவிட மூன்று மடங்கு பெரியது. 
இந்த வசதி சிங்கப்பூரின் துவாஸ்  வட்டாரத்துக்கு அருகில் உள்ள ஜோகூர் நீரணையில் கட்டப்படுகிறது.
இதுவே உலகின் ஆகப் பெரிய நடுக்கடல் சரக்கு மாற்று வசதி என்று கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் 30 கப்பல்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி சரக்குகளை மாற்றிக்கொள்ளலாம்.
நேற்று புத்ராஜெயாவில் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது முன்னி லையில் திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
மலேசியாவில் கடற்துறை நிறுவனமான கேஏ பெட்ராவும் ஹாங் காங்கை மையமாகக் கொண்டுள்ள ஹட்சிசன் துறைமுகங்களும் ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டன.
திட்டத்தின் 30 விழுக்காட்டுப் பங்கு ஹட்சிசன் துறைமுகங்களுக்குச் சொந்தமானது.
ஷட்சிசன் துறைமுகங்கள் உலகிலேயே ஆகப் பெரிய துறைமுகச் சேவை நிறுவனமாகும். மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்திலும் அதற்குப் பங்கு உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon