மூடுபனியால் சிட்னி விமான நிலையப் பயணங்கள் பாதிப்பு

மூடுபனியால் சிட்னி விமான நிலையப் பயணங்கள் பாதிப்பு

1 mins read
20ebf65b-51c0-4a71-b0a2-c239913ba226
-

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட மூடுபனியால் விமானப் பயணங்கள் புதன்கிழமை காலை தாமதமடைந்தன.

கிட்டத்தட்ட 12 உள்நாட்டு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன், சில அனைத்துலகப் பயணங்கள் தாமதமடைந்தன.

விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள், குறிப்பாக வாகனமோட்டிகள், மூடுபனி குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டின் வானிலை ஆய்வகம் கேட்டுக்கொண்டுள்ளது.