புருணையில் ஓரின உறவுக்கு எதிரான கடுமையான விதிமுறைகள் இன்று முதல் செயல்படுத்தப்படும். அத்தகைய உறவில் ஈடுபடும் குற்றவாளிகள்மீது அவர்கள் இறக்கும்வரை கற்கள் எறியப்படுவது அந்நாட்டில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
இதனுடன் வேறு சில புதிய சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையை உலக நாடுகள் பல கண்டித்துள்ளன. இத்தகைய தண்டனைகள் கொடூரமானவை என்றும் அவை மனித உரிமை பாதுகாப்புக்கான மிகப் பெரிய பின்னடைவு என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியது.

