பெட்டாலிங் ஜெயா: மலேசிய அமைச்சர் ஒருவர், மலேசியர் களைவிட தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்தும் சிங்கப்பூரர்களைப் பின்பற்ற வேண்டும் என்று தமது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். மலேசியாவுக்கு தெற்கே உள்ள அண்டை நாடு என்று சிங்கப்பூரைக் குறிப்பிட்டு பேசிய நீர், நில, தேசிய வளங்களின் அமைச்சர் சேவியர் ஜெயகுமார், மலேசியாவில் நாள்தோறும் தலைக்கு ஒருவர் 201 லிட்டர் நீரைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். "இவ்வாண்டு இறுதிக்குள் இதனை 180 லிட்டராக குறைக்க விரும்புகிறோம். தெற்கே உள்ள நாட்டில் தனிப்பட்ட ஒருவர் 140 முதல் 150 லிட்டர் தண்ணீரையே பயன்படுத்துகின்றனர்," என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் பேசிய அவர், சிங்கப்பூரிடம் இருந்து வாங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை நம்பி ஜோகூர் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு மாத காலத்தில் பிரதமர் மகாதீரிடம் ஆய்வு சமர்பிக்கப்படும் என்றும் கூறினார்.
'சிங்கப்பூரரைப் போல நீரை குறைவாக பயன்படுத்துக'
1 mins read

