பண்டார் ஸ்ரீ பகவான்: புருணையில் கடுமையான ஷரியா சட்டம் நடப்புக்கு வந்துள்ள நிலையில் நாட்டில் இஸ்லாமிய போதனைகள் வலுப்பட வேண்டும் என்று புருணை சுல்தான் அழைப்பு விடுத்துள்ளார். ஓரினப்புணர்ச்சி, கள்ளக் காதல் குற்றத்திற்கு பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொல்வது உட்பட கடுமையான தண்டனைகள் ஷரியா சட்டத்தின் கீழ் விதிக்கப்படும். இந்த நிலையில் தலைநகர் பண்டார்ஸ்ரீ பகவான் அருகே பொதுமக்களிடையே பேசிய சுல்தான் ஹசனல் போல்கியா, "இஸ்லாமிய போதனைகள் வளர்ந்து வலுப்படுவதைக் காண விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டார். ஆனால் ஷரியா சட்டம் அம லுக்கு வந்துள்ளதையோ கடுமை யான சட்டங்களின் விவரங்களை யோ அவர் தமது பேச்சில் குறிப் பிடவில்லை. புருணயின் முடிவு உலக அளவில் விமர்சிக்கப்பட் டாலும் புருணை நேர்மையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று அவர் கூறினார். "புருணைக்கு யார் வந்தாலும் இனிமையான அனுபவங்களைப் பெறலாம்," என்றார் புருணை சுல்தான்.
இஸ்லாமிய போதனைகள் வலுப்பட புருணை அழைப்பு
1 mins read

