முன்னாள் 'டத்தோஸ்ரீ' மீது மோசடி குற்றச்சாட்டு

முன்னாள் 'டத்தோஸ்ரீ' மீது மோசடி குற்றச்சாட்டு

1 mins read
1572f026-ed54-4f4f-b7d6-88287adce56c
ஞானராஜா மீது நேற்று நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. படம்: ஊடகம் -

ஷா ஆலம்: மலேசியாவின் கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தின் தொடர்பில் முன்னாள் 'டத்தோஸ்ரீ' ஒருவர் மீது நேற்று மூன்று ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் சுமத் தப்பட்டன. ஷா ஆலம் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸெனித் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நரை ஏமாற்றி முன்னாள் 'டத் தோஸ்ரீ' எம்.ஜி. ஞானராஜா 19 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பினாங்கு மாநிலத்தின் 6.3 பில்லியன் ரிங்கிட் சுரங்கப்பாதை பெருந்திட்டத்தை மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு விசாரிப்பதை தம்மால் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறி ஞானராஜா ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. மூன்று வெவ்வேறு சம்பவங் களில், 2017 ஜூலையில் இரு முறையும் அதே ஆண்டில் ஆகஸ்டு மாதத்திலும் ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணையைத் தடுத்து நிறுத்த தம்மால் உதவ முடியும் என்று அவர் கூறினார். இதையடுத்து 2017 ஜூலையில் நிர்வாக இயக்குநரை ஏமாற்றி இரண்டு மில்லியன் ரிங்கிட்டையும் ஆகஸ்ட் மாதத்தில் மேலும் இரண்டு மில்லியன் ரிங்கிட்டையும் அவர் பெற்றதாக முதல், 3வது குற்றச்சாட்டுகள் தெரிவிக் கின்றன. 2017 ஜூலை 27ஆம் தேதி 15 மில்லியன் ரிங்கிட் பெற்றது 3வது குற்றச்சாட்டாகும். இதன் தொடர்பில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஞானராஜா கைது செய்யப்பட்டார்.