கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிக்காரன் மீது 50 கொலைக்குற்ற வழக்குகள்

கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிக்காரன் மீது 50 கொலைக்குற்ற வழக்குகள்

1 mins read
7017abb0-52a7-42ff-9189-cce720d2ced7
-
Google News Preferred Icon

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசலில் கொடூரமான துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஆஸ்திரேலியர் 50 கொலைக் குற்றச்சாட்டுகளையும் 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் எதிர்நோக்குவார் என்று அந்நாட்டின் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூடு கடந்த மாதம் 15ஆம் தேதி நிகழ்ந்தது.

மற்ற சில குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் நியூசிலாந்தின் போலிசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிக்காரனான 28 வயது பிரென்டன் டரன்ட், வெள்ளை இனவாதி எனச் சந்தேகிக்கப்படுகிறது. அவர் நாளை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவேண்டும்.