கோலாலம்பூர்: மலேசியா அதன் கடன் சுமையைக் குறைக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துகளை விற்கக்கூடும் என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். 'இக்குவேனிமிட்டி' ஆடம்பர உல்லாசப் படகு 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (514.14 மில்லியன் ரிங்கிட்) ஜெண்டிங் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்க நிலத்தை விற்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக டாக்டர் மகாதீர் கூறினார். அரசாங்கத்திற்குச் சொந்த மான எந்தெந்த நிலங்களை விற்கலாம் என்பதை அடையாளம் காண்பதன் மூலம் நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற் கான சாத்தியம் உள்ளது என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். தேவை ஏற்பட்டால் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை தாங்கள் விற்கக்கூடும் என்றும் அவர் சொன்னார். அவ்வாறு நிலம் விற்கப் பட்டால் மலேசியர்களுக்கு மட்டுமே அது விற்கப்படும் என்றும் வெளிநாட்டினருக்கு அல்ல என்றும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார். கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத் தில் அவர் இதனைத் தெரிவித் தார். நாட்டின் கடன் சுமையைக் குறைக்க பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக வும் அவர் சொன்னார்.
மகாதீர்: அரசாங்க சொத்துகளை விற்கக்கூடும்
1 mins read

