லண்டன்: ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த வகை செய்யும் மசோதாவிற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்ற கீழ் அவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. எந்த உடன்பாடும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தடுக்க பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே பிரெக்சிட் விவகாரத்தை தாமதப்படுத்த இந்த மசோதா வழிவகுக்கிறது. இந்த மசோதாவை முன்மொழிந்த வர் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் திருமதி கூப்பர். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 313 பேர் வாக்களித்தனர். 312 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இந்த மசோதா கீழ் அவையில் நிறைவேற்றப்பட்டது. இனி இந்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. பிரெக்சிட் விவகாரத்தை தாமதப்படுத்துவது குறித்து எவ்வாறு முடிவுகளை எடுப்பது என்பது பற்றி தெளிவான நடைமுறைகளை நிர்ணயிக்க வேண்டிய அவசியமுள்ளது என்று திருமதி கூப்பர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் ஒருமித்த ஒப்புதல் அவசியம். எவ்வித உடன்பாடும் இல்லா மலேயே இம்மாதம் 12ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தவிர்க்க பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே வரும் புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் களிடம் உத்தேசத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். பிரிட்டிஷ் நாடாளுமன்ற மேலவையில் அந்த மசோதா குறித்த வாக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது தெரிய வில்லை. இருப்பினும் அந்த மசோதா குறித்த வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பிரெக்சிட் தாமதத்திற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல்
2 mins read

