சுடச் சுடச் செய்திகள்

50 கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஆஸ்திரேலியர் 

சிட்னி: சென்ற மாதம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்  நகரில் உள்ள இரு பள்ளிவாசல் களில் 50 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தொடர்பில்  குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்   50 கொலைக் குற்றச்சாட்டுகளையும் 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குவதாக நியூசிலாந்து போலிசார் கூறியுள்ளனர்.
அந்த ஆஸ்திரேலியர் மீதான மற்ற குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப் பட்டு வருவதாகவும் போலிசார் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள னர். அந்தக் குற்றச்சாட்டுகள், நியூசிலாந்து  தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து நீதிமன்றம் கருதுவது தொடர்பிலானதாக இருக்கும் என்றும் போலிசார் கூறினர்.
அத்தாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 28 வயது ஆஸ்திரேலியரான பிரன்டன்  டரண்ட் மீது முன்னதாக ஒரே  ஒரு  கொலைக் குற்றச்சாட்டு மட்டுமே சுமத்தப்பட்டிருந்தது.
அவரிடமிருந்து குற்ற ஒப்புதலோ அல்லது மறுப்போ பெறப்படாத நிலையில்   அந்த ஆஸ்திரேலியர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 
கிறைஸ்ட்சர்ச் நீதிமன்றத்தில்  மீண்டும் விசாரணை இன்று தொடங்கவுள்ள வேளையில்  டரண்ட்,  அதிக பாதுகாப்பு உள்ள ஆக்லாந்தில் உள்ள சிறைச் சாலையில் இருந்தபடியே காணொளி தொடர்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் தப்படுவார் என்று நீதிமன்றத் தகவல்கள் கூறின.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon