கிறைஸ்ட்சர்ச்: சந்தேக நபருக்கு மனநல சோதனை

கிறைஸ்ட்சர்ச்: சந்தேக நபருக்கு மனநல சோதனை

1 mins read
beca8455-ccf8-40db-8cdc-830779794241
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இரு பள்ளி வாசல்களில் நுழைந்து ஐம்பது பேரைக் சுட்டுக்கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரை மனநல சோதனைக்கு அனுப்புமாறு நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற வழக்கை சந்திக்கும் மனநிலையில் அவர் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கேமரன் மேண் டெர் தெரிவித்தார். ஆஸ்திரேலியரான பிரென்டன் டரண்ட் மொத்தம் ஐம்பது கொலைக் குற்றச்சாட்டுகளையும் 39 கொலை முயற்சி குற்றச்சாட்டு களையும் எதிர்நோக்குகிறார். கைகள் கட்டப்பட்டு சிறைச் சாலை சீருடையில் அவரை நீதி மன்றத்துக்கு காவல்துறையினர் அழைத்துவந்தனர். அப்போது பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் களின் உறவினர்கள், நண்பர் களுடன் நீதிமன்றம் நிரம்பி வழிந் தது. ஆனால் பிரெண்டன் டாரன்டி டமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பெறப்படவில்லை. நியூசிலாந்து வரலாற்றில் இது வரை இல்லாத துப்பாக்கிச் சூடு கடந்த மாதம் நடைபெற்றது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், இந்தச்சம்பவத்தை நியூசிலாந்தின் இருண்ட நாட்கள் என்று வருணித்திருந்தார். அதோடு நியூசிலாந்து முழு வதும் தானியக்க ஆயுதங்களுக் கும் பயங்கர துப்பாக்கிகளுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்தார்.