சுடச் சுடச் செய்திகள்

மலேசியா: கெஅடிலான் கூட்டத்தில் அமளி; வேட்பாளர் வெளியேற்றம்

ரெம்பாவ்: ரந்தாவ் இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான ஆர். மலர்விழி நேற்று இரவு நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் நுழைந்து தனது தேர்தல் அறிக்கையை வெளியிட முயற்சி செய்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற் பட்டது.
இரவு 10.15 மணியளவில் பக்கத் தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுக்குப் பக்கத்தில் அன்வார் இப்ராஹிம் மற்றும் மூத்த தலைவர்கள் அமர்ந் திருந்த பிரமுகர்கள் பகுதிக்குள் 51 வயது மலர்விழி பாதுகாப்புகளை மீறி நுழைய முயற்சி செய்தார். 
ஆனால் பாதுகாப்பு அதிகாரி களும் காவல்துறையினரும் அவரை  தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இருந்தாலும் கெஅடிலான் கட்சிக் கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலர்விழி, தனது தேர்தல் அறிக்கையை அன்வார் இப்ராஹிமிடம் கொடுப்பதற்கு உரிமை இருக்கிறது என்றார்.
தேசிய முன்னணியின் முஹம்மட் ஹசான், பக்கத்தான் ஹரப்பான் சார்பில் டாக்டர் ஸ்ரீராம், சுயேச்சை வேட்பாளர்கள் மலர்விழி, முஹம்மட் நூர் யாசின்  ஆகிய நால்வர் ரந்தாவ் இடைத்தேர்தலில்  போட்டியிடு கின்றனர்.
இதற்கிடையே சாபாவில் உள்ள சண்டக்கான் தொகுதிக்கு  மே 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon