ஜோகூர் பாரு: கப்பலிலிருந்து கப் பலுக்கு சரக்கு மாற்றும் சேவை மையம் மலேசிய கடல் எல்லைக்கு வெளியே அமைவதாகக் கூறப்படு வதை நேற்று மறுத்த ஜோகூர் அரசு, ஜோகூர் கடற் பகுதிக் குள்தான் அந்த வசதி கட்டப்படு கிறது என்று கூறியது. ஜோகூர் அனைத்துலக வர்த்தக, முதலீடு, பயனீட்டுக் குழுவின் தலைவர் ஜிம்மி புவா வீ நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜோகூர் கடற்கரையிலிருந்து 3.5 கடல் மைல் தொலைவில் புதிய சரக்கு மையம் அமையும் என்று சொன்னார். இதனால் ஜோகூர் கடல் எல்லைக்குள்தான் அது இடம் பெறுகிறது என்றார் அவர். "2012 கடல் எல்லைச் சட்டத் தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் 1982 கடல் எல்லைச் சட் டத்தை வரையறுக்கும் பிரிவு 3(1)ல் 12 கடல் மைல் தொலைவு வரை இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. "பிரிவு 3(3)ல் மூன்று கடல் மைல் வரை இருக்கலாம்," என்று தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை ஜோகூர் துறைமுகத்துக்கு அருகே கப்பலிலிருந்து கப்பலுக்கு சரக்கு மாற்றும் பல மில்லியன் டாலர் சேவையைத் தொடங்கப் போவதாக மலேசியா அறிவித்தது. இதன் மூலம் கப்பல் நிறுவனங் களுக்கு செலவு குறையும் என்று தெரி விக்கப்பட்டது. இதற்கிடையே மலேசியாவின் சரக்கு மாற்றும் மையம் குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளது. "மலேசியாவின் சரக்கு மையம் தொடர்பில் எந்தவிதத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. குறிப்பாக அது எந்த இடத்தில் அமைகிறது என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம்," என்று ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் பதிலளித்தார். மலேசியாவின் சரக்கு மையத் திட்டத்தால் சிங்கப்பூர் கடல் போக்குவரத்துக்கு ஏற்படும் பாத கங்கள், எல்லைகளுக்கு இடையே ஏற்படும் உத்தேச சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம் சங்களை ஆராய வேண்டியுள்ளது என்று சிங்கப்பூர் பேச்சாளர் சொன்னார்.
'மலேசிய கடல் எல்லைக்குள்தான் புதிய மையம்'
2 mins read

