ரோம் சாசனத்திலிருந்து மலேசியா விலகல்

ரோம் சாசனத்திலிருந்து மலேசியா விலகல்

1 mins read

பெட்டாலிங் ஜெயா: அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் ஏற்படுத் திய ரோம் சாசனத்திலிருந்து தான் விலகிக்கொள்ளவிருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது. இந்தச் சாசனத்தை எதிர்க்கும் பிரிவினர் மலேசியாவில் இன, சமய உணர்வுகளைத் தூண்டி விட்டு மாநிலங்களை ஆளும் மன்னர்களையும் இதில் ஈடுபடுத் தியதால் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்திற்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மலேசிய அரச குடும்பத்தினருக்கு சட்ட நடவடிக் கைகளிலிருந்து விலக்கு அளிக் கப்படாத காரணத்தால் அந்தச் சாசனத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. மலேசியாவில் மலாய்க்காரர் களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பாதிக்கப்படக்கூடும் என்று குறை கூறல் எழுந்துள்ளதாக பிரதமர் மகாதீர் முகம்மது குறிப்பிட்டார். இதன் தொடர்பிலேயே இந்தச் சாசனத்திலிருந்து விலகும் முடிவை மலேசிய அரசாங்கம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து தீவிர பரி சீலனைக்குப் பிறகு நேற்று முன் தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் ரோம் சாசனத்திலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டதாக தி ஸ்டார் இணையத்தளம் செய்தி வெளியிட்டது.