ஆப்கானிஸ்தான் இரட்டை வெடிப்பில் மூவர் மரணம்

ஆப்கானிஸ்தான் இரட்டை வெடிப்பில் மூவர் மரணம்

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நேற்று நிகழ்ந்த இரட்டை வெடிப்பில் குறைந்தது மூவர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்த வர்களில் ஒரு பிள்ளையும் இரு பெண்களும் அடங்குவர். காயம் அடைந்தவர்களில் எட்டுப் பேர் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.