சிகாகோ: அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப் பான 737 மேக்ஸ் ரக விமா னத்தின் உற்பத்தி தற்காலிகமாக குறைக்கப்படுவதாக அந்த நிறு வனம் அறிவித்துள்ளது. இம்மாதத்தின் நடுப்பகுதி யிலிருந்து 737 மேக்ஸ் ரக விமா னத்தின் தயாரிப்பு இலக்கு மாதத் துக்கு 52லிருந்து 42ஆக குறைக் கப்படும் (19% குறைவு) என்று அந்த நிறுவனத்தின் அறிக் கையில் நேற்று முன்தினம் குறிப் பிடப்பட்டது. அண்மையில் ஐந்து மாத இடைவெளியில் நிகழ்ந்த இரு பயணிகள் விமான விபத்துக ளோடு தொடர்புடைய இந்நிறுவ னத்தின் 737 மேக்ஸ் ரக விமா னத்தின் ஆர்டர்களை பெறு வதற்குப் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதால் இந்தத் தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
737 மேக்ஸ் ரக விமானங்களின் உற்பத்தியைக் குறைக்கும் போயிங்
1 mins read
படம்: ராய்ட்டர்ஸ் -

