இந்தியாவில் தேர்தல் நடைபெறும் பரபரப்பான சூழ் நிலைக்கு மத்தியில் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமட் குரேஷி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 16 முதல் 20ஆம் தேதிக்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என நம்பத் தகுந்த உளவுத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட் டிருப்பது உலக அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அனைத்துலக ஊட கங்களில் தலைப்புச் செய்தியாக மாறும் என்பதைத் தாம் நன்கு அறிந்திருப்பதாகவும் அதன் கார ணமாக மிகப் பொறுப்பான பதவி யில் உள்ள தாம் அந்தப் பொறுப்பை உணர்ந்து பேசுவதாகவும் முகமட் குரேஷி தெரிவித்துள்ளார்.
"எங்களுக்குக் கிடைத்துள்ள நம்பகமான தகவல்களின்படி இம் மாதம் 16 முதல் 20ஆம் தேதிக்குள் பாகிஸ்தான் மீது புதிய தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. "இதுகுறித்து இஸ்லாமாபாத் தில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பு நாடு களைச் சேர்ந்த தூதர்களுக்கு இரு தினங்களுக்கு முன்பே தக வல் அளித்துள்ளோம். ராஜதந்திர ரீதியில் பாகிஸ்தான் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் எண்ணத்துடன் இந்தியா இவ்வாறு திட்டமிட்டுள்ளது," என்று தமது சொந்த ஊரான முல்தானில் செய்தியாளர்களிடம் பேசுகையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார் குரேஷி.
எனினும் எத்தகைய ஆதாரங் களின் அடிப்படையில் இவ்வாறு தேதிகளைக் குறிப்பிட முடிகிறது என்று அவர் விளக்கமளிக்க வில்லை. பாகிஸ்தானின் இப்புதிய குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு உடனடி யாகக் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அண்மையில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான எஃப்-16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக வும், பாகிஸ்தானில் இருந்தபடி இயங்கும் தீவிரவாத அமைப்பின் முகாம்களை குண்டு வீசி அழித்த தாகவும் இந்தியா கூறியதை பாகிஸ்தான் இதுவரை ஏற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மூடப்பட்ட முக்கிய வான்வழித் தடத்தைப் பாகிஸ்தான் அரசு மீண்டும் திறக்க உத்தர விட்டுள்ளது. இதையடுத்து இந் தியத் தலைநகர் டெல்லியில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் வானில் சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் முடிவுக்கு வந்துள்ளது. பிப்ரவரியில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலையடுத்து
பாகிஸ்தான் அரசு அக்குறிப்பிட்ட வான்வழித் தடத்தில் விமானங்கள் பறக்க தடை விதித்திருந்தது.

