ரோம் ஒப்பந்த விலகல்: மலேசியா புதுவிளக்கம்

ரோம் ஒப்பந்த விலகல்: மலேசியா புதுவிளக்கம்

1 mins read

பெட்டாலிங் ஜெயா: ரோம் சாச னத்தில் இருந்து மலேசியா விலக முடிவு செய்தது, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் இடர்ப்பாடு காரண மாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கை என்று கூறியுள்ளார் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா. "ஒரு சிலவற்றால் தூண்டப் பட்டு மக்கள் தெருக்களில் இறங் குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன," என்று மலாய் மெயில் உள்ளிட்ட சில ஊடகங் களிடம் அவர் தெரிவித்தார். இதுபற்றி மேலும் விளக்கமளிக்க அவர் மறுத்துவிட்டார். முன்னதாக கடந்த வெள்ளிக் கிழமை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தில் இருந்து மலேசியா விலகிக் கொள் வதாக அறிவித்தது. இப்பிரச் சினையை கட்சிகள் அரசியலாக்கி வருவதால் விலகுவதாக மலேசிய பிரதமர் மகாதீர் கூறியதாக 'தி ஸ்டார்' நாளிதழ் குறிப்பிட்டது. இந்த ஒப்பந்தம் மலாய் மன்னர் களின் அரசுரிமைக்கு அச்சுறுத் தலாக இருப்பதாக எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் அரச பரம்பரையினரும் குரல் எழுப்பி யதைத் தொடர்ந்து விலகும் முடி வை மலேசியா எடுத்தது. ரோம் ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டு இருந்தாலும் அது இன்னும் உறுதி செய்யப் படாத நிலையில், அதிலிருந்து விலக ஜூன் வரை காலக்கெடு உள்ளது. இதில் 122 நாடுகள் இணைந்துள்ளபோதும் அமெ ரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் இதில் இன்னும் சேரவில்லை.