நெட்டன்யாகுவின் கடைசி நேர தேர்தல் வாக்குறுதியைச் சாடும் துருக்கி

நெட்டன்யாகுவின் கடைசி நேர தேர்தல் வாக்குறுதியைச் சாடும் துருக்கி

1 mins read

ஜெருசலம்: மீண்டும் இஸ்ரேலின் பிரதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என்று அந் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வாக்குறுதி அளித் துள்ளார். இஸ்ரேலின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நெட்டன்யாகு நாட்டின் இறை யாண்மை நீட்டிக்கப்படும் என்று சொன்னார். அனைத்துலக சட்டத்தின் கீழ் இந்தக் குடியேற்றங்கள் சட்ட விரோதமானவையாக இருந்த போதிலும் இஸ்ரேல் அந்தக் கருத்துடன் முரண்படுகிறது. மேற்குக் கரை பகுதியிலுள்ள குடியேற்றங்களில் சுமார் நான்கு லட்சம் யூதர்களும் 25 லட்சம் பாலஸ்தீனர்களும் வசித்து வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக் கது. இந்நிலையில், "1967களில் அது பாலஸ்தீன எல்லைக்குட்பட்ட தாக இருந்தது. இஸ்ரேலின் ஆக் கிரமிப்பு சட்டவிரோதமானது," என்று சாடியுள்ளார் துருக்கி வெளியுறவு அமைச்சர். மேலும் "வாக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக நெட்டன் யாகு பொறுப்பற்ற முறையில் வாக்குறுதி வழங்குகிறார். "இதனால் தேர்தலில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை," என்று டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். பாலஸ்தீனத்துடன் உடன்பாடு ஏற்பட போவதில்லை என்ற எண்ணம் கொண்ட வலது சாரி மக்களின் வாக்குகளை பெறுவதற் காக நெட்டன்யாகு இவ்வாறு கூறி யுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.