படகு மோதி துண்டான பாலம்

படகு மோதி துண்டான பாலம்

1 mins read
ff093675-a7d5-43c3-b331-aca6c42481a4
-

பிரேசிலின் மோஜு ஆற்றுப் பாலத்தின் தூண் மீது படகு மோதியதால் பாலம் உடைந்து விழுந்தது. 860 மீட்டர் நீளம் கொண்ட அந்த பாலத்தின் 200 மீட்டர் பகுதி உடைந்து ஆற்றுக்குள் விழுந்தபோது இரண்டு கார்கள் நீரில் மூழ்கின. படகில் இருந்த ஐந்து பேரும் உயிர் தப்பியதாகவும் காருக்குள் இருந்தவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பாரா மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஜனவரி மாதம் மேற்கொள்ளபட்ட ஆய்வில் பாலத்தின் தூண்களில் அரிப்பு உள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.