இந்தோனீசியாவில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி என வாக்குறுதி

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தல் வேட்பாளர் பிரபோவோ சுபின்டோ அழைப்பு விடுத்திருந்த மாபெரும் பேரணியில் கலந்து கொள்வதற்காக பல்லாயிரக் கணக்கான மக்கள் ஜெலோரா புங் கர்னோ விளையாட்டரங்கில் திரண்டிருந்தனர். சுமார் 77,193 பேர் அமரக்கூடிய அந்த அரங்கில் அதிகாலை 4 மணி முதலே மக்கள் கூடத் தொடங்கிவிட் டனர்.
மில்லியன் கணக்கான மக்கள் திரளக்கூடும் என்று பேரணி ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டதாக பிரபோவோ கூறினார். மேலும் இந்தோனீசிய வரலாற்றில் இது மாபெரும் அரசியல் பேரணி என்றும் நம்பப்படுகிறது. அலை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே பிரபோவோ காலை 8 மணியளவில் உரை யாற்றினார். நாட்டின் நிலையற்ற பொருளா தாரம், ‘ஸ்மார்ட் கார்ட்’ திட்டம் ஆகியவற்றுக்காக அதிபர் ஜோ கோ விடோடோவைச் சாடி னார்.
நான்காம் நிலை புற்றுநோய் போல் நாட்டில் ஊழல் புரையோடி விட்டது என்ற அவர், ஊழலுக்கு எதிராக போராடுவது முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
ஊழல் நாட்டின் பொருளாதார வளங்களைச் சூறையாடிவிட்டது. இல்லையென்றால் மக்கள் பலன டைந்திருப்பார்கள் என்றும் அவர் பேசினார்.
இந்தோனீசிய அதிபர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரபோவோவின் இப்பேரணி முக்கியத்துவம் பெற் றுள்ளது. கடந்த தேர்தலில் 46.85% வாக்குகள் மட்டுமே பெற்று பிரபோவோ தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவிடம் தோற்றார். 
அதற்கு முன் 2004ல் நடந்த தேர்தலிலும் முந்தைய அதிபர் மெகாவதி சுக்கார்னோபுத்ரியிட மும் பிரபோவோ தோல்வியையே தழுவினார். தேர்தலுக்கு முந் தைய கருத்துக்கணிப்புகள் இப் போதும் விடோடோவிற்கு ஆதர வாகவே உள்ளன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon