ஆஸ்திரேலியாவில் இந்த வாரத்திற்குள் தேர்தல் அறிவிக்கப்படலாம்

ஆஸ்திரேலியாவில் இந்த வாரத்திற்குள் தேர்தல் அறிவிக்கப்படலாம்

1 mins read
5b7cfa02-f32d-40da-8425-e986bff53cb0
-

ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் அந்நாட்டின் தொழிற்கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் தற்போதைய ஆளுங்கட்சியான பழமைவாதக் கட்சி விரைவில் முன்னேற்றம் அடைந்து வருவதாக அண்மையில் எடுக்கப்பட்ட இரண்டு கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

தொழிற்கட்சிக்கு 52 விழுக்காடு வாக்குகளும் பழமைவாதக் கட்சிக்கு 48 விழுக்காடு வாக்குகளும் கிடைக்கும் என்று 'தி ஆஸ்திரேலியன்' செய்தித்தாள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு கூறுகிறது.

மார்ச் மாதத்தில் அந்த விழுக்காடுகள் தொழிற்கட்சிக்கும் பழமைவாதக் கட்சிக்கும் முறையே 54, 46 ஆக இருந்ததாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது.

'சிட்னி மார்னிங் ஹெரல்ட்' எனும் நாளிதழ் வெளியிட்ட இப்சோஸ் என்ற மற்றொரு கருத்துக்கணிப்பின்படி, தொழிற்கட்சிக்கு 52 விழுக்காடு வாக்குகளும் பழமைவாதக் கட்சிக்கு 48 விழுக்காடு வாக்குகளும் கிட்டலாம்.

ஆஸ்திரேலியாவில் இந்த வாரத்திற்குள் பிரதமர் ஸ்காட் மொர்ரிசன் தேர்தலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.