தைவானில் அவசரமாக தரையிறங்கிய 'கேத்தே டிராகன்' விமானம்

தைவானில் அவசரமாக தரையிறங்கிய 'கேத்தே டிராகன்' விமானம்

1 mins read

தைப்பே: தைவானிலிருந்து ஹாங்காங் நோக்கிச்சென்ற 'கேத்தே டிராகன்' பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக மீண்டும் தைவானுக்குத் திரும்பியது. அந்த விமானத்தில் 317 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரை இறக்கப் பட்டதாக கேத்தே டிராகனின் தாய் நிறுவனமான கேத்தே பசிபிக் குறிப்பிட்டது. ஆனால் விமானத்தின் மீது பறவை மோதியதாக தைவானிய ஊடகங்கள் தெரிவித்தன. இதனை தைவான் சிவில் விமான நிர் வாகத்தின் அதிகாரி ஒருவர் மறுத்தார். ஏர்பஸ் A330 விமானத்தில் இருந்த பயணிகள் பின்னர் மற்றொரு விமானத்துக்கு மாற்றப்பட்டு ஹாங்காங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கேத்தே பசிபிக் கூறியது.