கால்வாயில் பாய்ந்த பேருந்து; 11 பேர் பலி

கால்வாயில் பாய்ந்த பேருந்து; 11 பேர் பலி

1 mins read
3459587e-1ed3-46ad-943b-0bde33236a4f
கோலாலம்பூர் விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் மாண்டனர். படம்: த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையம் -

கோலாலம்பூர்: மலேசியாவில் பயணிகள் பேருந்து ஒன்று சாலையிலிருந்து சறுக்கி கால் வாயில் பாய்ந்ததில் 11 பேர் உயி ரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர். செப்பாங்கில் நேற்று இரவு 11.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத் தின் 'மாஸ்' சரக்கு வளாகத் துக்கு அருகே பேருந்து விபத்துக் குள்ளானது. விபத்தில் இறந்தவர்களில் மலேசிய ஓட்டுநர், பத்து வெளி நாட்டு ஊழியர்கள் அடங்குவர் என்றும் காயம் அடைந்தவர்களில் இருவர் மலேசிய பெண்கள், முப்பது வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டவர்களில் பெரும் பாலோர் இந்தோனீசியா, நேப் பாளம், பங்ளாதேஷ் ஆகிய நாடு களைச் சேர்ந்தவர்கள். நிலாயில் உள்ள தங்கு விடுதியிலிருந்து ஒப்பந்த ஊழியர் களை ஏற்றிக்கொண்டு சென்ற போது பேருந்து சாலையிலிருந்து விலகி ஓடி பத்து மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் விழுந்தது. இதில் ஓட்டுநரும் எட்டு ஊழியர்களும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவ மனையில் இறந்தனர். பேருந்தில் மொத்தம் 43 பயணிகள் இருந்த னர்.