மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரை மலேசியாவின் ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
சரவாக் மாநிலப் பள்ளிகள் தொடர்புடைய சூரிய சக்தித் திட்டத்தின் தொடர்பில் மேலும் ஒரு குற்றச்சாட்டை திருவாட்டி ரோஸ்மா எதிர்நோக்கவுள்ளார் என்று 'தி மலேசியன் இன்சைட்ஸ்' செய்தித்தளத்தின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடர்பில் அவர் 5 மில்லியன் ரிங்கிட் பணத்தைக் கையூட்டாகப் பெற்றதாக அந்த கட்டுரையில் கூறப்படுகிறது.
கடந்தாண்டு அக்டோபர் திருவாட்டி ரோஸ்மா மீது கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குவது தொடர்பான 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

